×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மீண்டும் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களின் கடுமையான கிண்டலுக்கு ஆளான நடிகை ராஷ்மிகா.! வைரலாகும் புகைப்படம்.

Rashmika

Advertisement

நடிகர் விஜய தேவரகொண்டாவுடன் இணைந்து  கீதாகோவிந்தம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தெலுங்கு மற்றும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா. மேலும் அப்படத்தில் இடம்பெற்ற இன்கேம் இன்கேம் பாடல் மூலம் அவர் இளைஞர்கள் மத்தியில் கனவுக்கன்னியாக கொடிகட்டி பறந்தார். அதனை தொடர்ந்து அவர் மீண்டும் விஜய தேவரகொண்டாவுடன், டியர் காம்ரேட் என்ற படத்தில் நடித்துள்ளார்.

மேலும் தமிழ் சினிமாவில்  நடிப்பதற்கு முன்பே இவருக்கு தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் ஏராளமான ரசிகர் பட்டாளம் உள்ளது. அதனை தொடர்ந்து தற்போது ராஷ்மிகா கார்த்தி நடிப்பில் சுல்தான் என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் தமிழில் பல படங்களில் நடிக்கவும் ஆர்வமுடன் காத்திருக்கிறார். 

இந்நிலையில் சமீப காலமாக இவர் போட்டோஷுட்டில் எந்த போஸ் கொடுத்தாலும், அதனை நெட்டிசன்கள் வைகை புயல் வடிவேலுவை வைத்து கிண்டல் செய்து வருகின்றனர். ஆனால் அதை எல்லாம் ஜாலியாக எடுத்து கொண்டு ஷேர் செய்து வந்துள்ளார்.

தற்போது கூட ஒரு போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதனையும் விடாமல் நெட்டிசன்கள் வடிவேலுவை வைத்து கிண்டல் செய்துள்ளனர். தற்போது அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#rashmika
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story