×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஆத்தாடி.. 51 வயசுலயும் சும்மா அள்ளுதே.! கிளாமர் உடையில் ரசிகர்களை வாயடைக்க வைத்த ரம்யா கிருஷ்ணன்!!

ஆத்தாடி.. 51 வயசுலயும் சும்மா அள்ளுதே.! கிளாமர் உடையில் ரசிகர்களை வாயடைக்க வைத்த ரம்யா கிருஷ்ணன்!!

Advertisement


தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், பிரபு, விஜயகாந்த், சரத்குமார் என பல முன்னணி பிரபலங்களுடன் இணைந்து சூப்பர்ஹிட் படங்களில் நடித்து மாஸ் ஹீரோயினாக வலம் வந்தவர் ரம்யா கிருஷ்ணன். இவர் தெலுங்கு சினிமாவிலும் பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார். அவர் ரஜினியின் படையப்பா படத்தில் மிரட்டலான வில்லியாக நடித்த நீலாம்பரி கதாபாத்திரம் இன்றும் ரசிகர்களால் மறக்கமுடியாத ஒன்றாக உள்ளது. 

மேலும் அவர் பிரபாஸ் ஹீரோவாக நடித்த பாகுபலி படத்தில் ராஜமாதா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதற்கும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு கிடைத்தது. நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டமே உள்ளது. அவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொண்டுள்ளார்.

இதற்கிடையில் சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிடுவார். அவர் தற்போது பச்சை நிற உடையில் கிளாமராக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதனை கண்ட ரசிகர்கள் 51 வயதிலும் இப்படியா?? என வாயடைத்துபோயுள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Ramyakrishnan #Photoshoot
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story