×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

முதன் முறையாக இயக்குனர் வெற்றிமாறன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகும் விஜய் டிவி தொகுப்பாளினி! யார் அவர் தெரியுமா?

Ramya varimaran

Advertisement

இயக்குனர் வெற்றிமாறன் அவர்கள் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து இயக்கக்கூடிய சிறந்த இயக்குனர். இவர் முதன்முதலில் நடிகர் தனுஷை வைத்து பொல்லாதவன் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார்.அப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அதனை தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு அவர் இயக்கிய ஆடுகளம் திரைப்படம் தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த திரைக்கதையாசிரியர் விருதுகளைப் பெற்றுத் தந்துள்ளது. அதுமட்டுமின்றி இந்தத் திரைப்படத்திற்கு 6 தேசிய விருதுகள் கிடைத்துள்ளன.

மேலும் இவர் சிறந்த இயக்குனராக மட்டுமின்றி சிறந்த தயாரிப்பாளராகவும் சில படங்களை தயாரித்து வெற்றி கண்டுள்ளார். அண்மையில் இவர் இயக்கத்தில் வெளியான வடசென்னை, அசுரன் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தற்போது வெற்றிமாறன் தயாரிப்பில் நடிகரும், இயக்குனருமான சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் சங்கதலைவன். இப்படத்தில் முதன் முறையாக விஜய் டிவி தொகுப்பாளினி ரம்யா கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார் என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#ramya #Varimaran
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story