×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ரம்யா பாண்டியன் அம்மனாக நடிக்க போகிறாரா.? வைரலாகும் புகைப்படம்.!

ரம்யா பாண்டியன் அம்மனாக நடிக்க போகிறாரா.? வைரலாகும் புகைப்படம்.!

Advertisement

தமிழ் சினிமாவில் 'ஜோக்கர்' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். முதல் திரைப்படமே இவருக்கு மிகப்பெரும் பெயரை பெற்று தந்தது. ஆனால் இப்படத்திற்கு பின்பு ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அப்படங்கள் தோல்வியை அடைந்து வந்தன.

இதனால் ரம்யா பாண்டியனிற்கு தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது. இதன்பின் ஃபோட்டோ ஷூட்டில் தனது கவனத்தை செலுத்திய ரம்யா பாண்டியன் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை எடுத்து தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருவார்.

அவ்வாறு இவர் பதிவிட்ட ஒரு புகைப்படம் இணையத்தில் மிகவும் வைரலானது. இப்புகைப்படத்திற்கு பிறகு ரம்யா பாண்டியனுக்கு ஃபாலோயர்ஸ்கள் அதிகமானதோடு ரசிகர்களும் அதிகமாகினர். மேலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் ரம்யா பாண்டியன்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்பும் இவருக்கு எந்தவித பட வாய்ப்புகளும் வரவில்லை. இதனால் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருவார். இவ்வாறு தற்போது அம்மன் போல் வேடமணிந்து புகைப்படம் எடுத்து அதனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ரம்யா பாண்டியன் அம்மனாக திரைப்படத்தில் நடிக்கப் போகிறாரா என்று கேட்டு கமெண்ட் செய்து வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#bigboss #Vijaytv #ramyapandian #latest #News
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story