திடீரென பிக்பாஸ் வீட்டிற்கு வந்த நடிகை ரம்யா கிருஷ்ணன்! வைல்ட் கார்ட் எண்ட்ரியா? குழப்பத்தில் போட்டியாளர்கள்.
Ramya krishanan in thelungu biggboss
பிக்பாஸ் சீசன் மூன்று விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது. ஏறக்குறைய சீசன் மூன்று இறுதி கட்டத்தை நெருங்கிவிட்ட நிலையில் இந்த முறை பிக்பாஸ் படத்தை வெல்லப்போகும் அந்த பிரபலம் யார் என தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.
தமிழில் பிக்பாஸ் சீசன் ஒளிபரப்பாவதுபோலவே கன்னடம், தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் பிக்பாஸ் ஒளிபரப்பாகிறது. இதில் தெலுங்கில் ஸ்டார் மா தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் மூன்று ஒளிபரப்பாகிவருகிறது. இதனை பிரபல நடிகர் நாகர்ஜுனா தொகுத்து வழங்கிவருகிறார்.
இந்நிலையில் இன்றைய தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபல தமிழ் நடிகை ராமயா கிருஷ்ணன் சிறப்பு வேடத்தில் பிக்பாஸ் அரங்கிற்கு பிரமாண்டமாக வருகை தந்தார். பாகுபலி படத்தில் அவர் நடித்த ராஜ மாதா வேடத்தில் அவர் பிக்பாஸ் அரங்கிற்கு வந்தார்.
யாரும் எதிர்பாராத நேரத்தில் ரம்யா கிருஷ்ணன் பிரமாண்டமாக மேடையில் தோன்றியிருப்பது ஒருவேளை வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகிறாரா என அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.