×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

எல்லாம் வதந்தி - பிக்பாஸ் சீசன்-3 குறித்து பிரபல நடிகர் விளக்கம்

Ramesh thilak about bigboss 3

Advertisement

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தப்பட்ட பிரபல நிகழ்ச்சி பிக்பாஸ். பிக்பாஸ் சீசன் 1 மற்றும் 2 ஆகியவற்றை பிரபல நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். 

இந்த பிக்பாஸ் மூலம் பல்வேறு நட்சத்திரங்களின் உண்மை முகம் வெளி உலகத்திற்கு தெரியவந்தது. இதனால் சிலருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்தன. அதே சமயத்தில் சிலரின் பெயரும் புகழும் மக்கள் மத்தியில் குறையத் துவங்கியது. 

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் விரைவில் துவங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்தமுறையும் நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சீசன் 3க்கான ப்ரோமோ வீடியோக்கள் தயாராகி வருவதாகவும் தெரிகிறது. 

இதனைத் தொடர்ந்து இந்த புதிய சீசனில் கலந்துகொள்ள போகும் நட்சத்திரங்கள் யார் யார் என்பதனை தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் மக்கள் இருந்து வருகின்றனர். சிலர் தங்கள் மனதில் தோன்றும் நட்சத்திரங்களின் பெயர்களை சேர்த்து உத்தேச பட்டியலை வெளியிட துவங்கிவிட்டனர். 

இந்த உத்தேச பட்டியலில் அதிகமாக இடம்பெற்றவர் பிரபல நகைச்சுவை நடிகர் ரமேஷ் திலக். ஆரம்பத்தில் ரேடியோ ஜாக்கியாக பணியாற்றிய ரமேஷ் திலக் முதலில் மங்காத்தா படத்தில் நடித்தார். பின்னர் சூதுகவ்வும், நேரம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர். இவர் தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார். 

இந்நிலையில் தன்னை பிக்பாஸ் சீசன்-3 உடன் இணைத்து வெளியாகியுள்ள செய்திகள் அணைத்தும் வதந்தி என்றும் இந்த சீசனில் தான் கலந்துகொள்ள போவதில்லை என்றும் விளக்கமளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இவர் தற்பொழுது எஸ்.பி ஜனநாதன் இயக்கத்தில் லாபம் என்ற படத்தில் நடித்து வருகிறார். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#bigg boss tamil #Big boss 3 #kamalhasan #Ramesh thilak
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story