×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இளையராஜா - ராமராஜன் கூட்டணி மீண்டும் ரெடி… ரசிகர்களை குஷிப்படுத்திய புதிய அறிவிப்பு!

இளையராஜா - ராமராஜன் கூட்டணி மீண்டும் ரெடி… ரசிகர்களை குஷிப்படுத்திய புதிய அறிவிப்பு!

Advertisement

இசைஞானி இளையராஜா மற்றும் மக்கள் நாயகன் ராமராஜன் கூட்டணியில் உருவாகி வரும் புதிய திரைப்படத்திற்கு ‘கடவுள் தந்த பரிசு’ என பெயரிடப்பட்டுள்ளது. இதன் மூலம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இருவரது கூட்டணி மீண்டும் திரையில் இணையவுள்ளது.

இளையராஜா திரையுலகில் தனது 50-வது ஆண்டை கொண்டாடி வரும் நிலையில், அவரும், ராமராஜனும் இணையும் 25-வது திரைப்படம் என்ற சிறப்பையும் இப்படம் பெற்றுள்ளது. புதுமுக இயக்குநர் காசிமாயன் இப்படத்தை இயக்குகிறார். படத்திற்கான கதை மற்றும் திரைக்கதையையும் அவரே எழுதியுள்ளார். இந்த படத்தின் நகைச்சுவைப் பகுதிகளை ராஜகோபால் எழுதியிருக்கிறார். வசனத்தை ராஜகோபால் மற்றும் எம். அடைக்கலம் இணைந்து எழுதியுள்ளனர்.

மேலும், நடிகர்கள் செந்தில் மற்றும் கோவை சரளா நீண்ட இடைவெளிக்குப் பிறகு ராமராஜனுடன் மீண்டும் இணைந்துள்ளனர். இவர்களது நகைச்சுவைக் கூட்டணி படத்திற்கு கூடுதல் பலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: சிவகார்த்திகேயன் - சீமான் புதிய கூட்டணி.. வெளியான அதிரடி அறிவிப்பு!

இளையராஜா - ராமராஜன் கூட்டணியை மீண்டும் திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், ‘கடவுள் தந்த பரிசு’ படத்தின் பணிகள் தற்போது தொடங்கியுள்ளன. முதல்கட்டமாக பாடல் பதிவு பணிகள் தொடங்கியுள்ள நிலையில், தொடர்ந்து படப்பிடிப்புக்கான பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதையும் படிங்க: நடிகர் ராஜ்கிரணுக்கு ஏற்பட்ட நிலைமை… முன்ஜாமின் மனுவால் பரபரப்பு!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Ilayaraja #Ramarajan #Kadavul thantha parisu #Senthil
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story