தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

எங்களைப் பற்றி வரும் வதந்திகளைப் பரப்பாமல் இருங்கள் கடுப்பான `96' படம் நடிகை !!!

ram-janu-96 movie-lovers

ram-janu-96 movie-lovers Advertisement

`நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தின் ஒளிப்பதிவாளர் பிரேம்குமார் இயக்கியுள்ள படம் `96'. பள்ளிக் காதலை மிக நேர்த்தியாக சொல்லியிருந்த இந்தப் படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

எத்தனை முறை சொன்னாலும் திகட்டாதது காதல். அந்த காதலை ஒரு முழு படமாக எடுத்து நம்மை பரவசப்படுத்தி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் பிரேம் குமார். இயக்குனராக முதல் படம் போல தெரியவில்லை.விஜய் சேதுபதி ஒரு இடத்தில் கூட விஜய்சேதுபதியாக தெரியவில்லை.

நடிகர் விஜய்சேதுபதி மற்றும் நடிகை த்ரிஷா நடிப்பில் வெளியான “96” திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு வருகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷாவின் பள்ளி பருவ கதாபாத்திரத்தில் பிரபல காமெடி நடிகர் எம் எஸ் பாஸ்கரின் மகன் ஆதித்யா பாஸ்கர் நடித்துள்ளார்.

பள்ளிப் பருவ த்ரிஷாவாக பெங்களூருவைச் சேர்ந்த கெளரி கிஷனும் நடித்துள்ளனர். இந்த ராம்-ஜானு ஜோடிதான் இணையத்தில் ஹாட் டாபிக்காக இருந்து வருகிறது. அவர்களின் நடிப்பும் பலரால் பாராட்டப்பட்டு வருகிறது.

சமூக வலைத்தளத்திலும் ஆதித்யா பாஸ்கர் மற்றும் கௌரி கிஷனின் புகைப்படங்களும் படு வைரலாக பரவி வருகிறது. அதே போல ஆதித்யா பாஸ்கர் மற்றும் கௌரி கிஷன் இருவரும் காதலித்து வருவதாகவும் சில செய்திகளும் பரவி வந்தது.

ஆனால்,தங்களுக்குள் எந்த ஒரு காதலும் இல்லை என்று நடிகை கௌரி கிஷன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெளிவுபடுத்தியுள்ளார். அதில், நாங்கள் இருவரும் காதலர்கள் இல்லை. ராம்-ஜானு எனும் காதல் ஜோடிகளின் கேரக்டரில் நடித்தோம் அவ்வளவுதான். உண்மையில், எங்களுக்குள் காதல் இல்லை. எங்களைப் பற்றி வரும் வதந்திகளைப் பரப்பாமல் இருங்கள் என பதிவிட்டுள்ளார். அந்த பதிவை நடிகர் ஆதித்யாவும் ரீ ட்வீட் செய்துள்ளார்.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Latest tamil news #Tamil Spark #Tamil news updates
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story