தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இயக்குனர் கூறியதால் ஆடைகளை அவிழ்த்தேன்! பிரபல நடிகை ஓபன் டால்க்!

Rajshri Deshpande has no qualms about nudity

rajshri-deshpande-has-no-qualms-about-nudity Advertisement

பல்வேறு குறும்படங்களில் நடித்த அனுபவம் கொண்ட ராஜ்ஸ்ரீ தேஷ்பாண்டே, இந்தி படங்கள் மற்றும் டிவி சீரியல்களில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார். ஆங்க்ர இன்டியன் காட்டஸ், தலாஸ், செக்சி துர்கா, 24 இந்தியா, கிக் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் அனுராக் காஷ்யப் இயக்கத்தில், வெப் சீரிஸ் ஒன்றில் செக்சியாக நடித்துள்ளார் ராஜ்ஸ்ரீ தேஷ்பாண்டே. அதிலும் படுக்கை அரை காட்சியில் அரை நிர்வாணமாக நடித்துள்ளார். கதைக்கு தேவைப்பட்டதால் படுக்கையறைக் காட்சியில் நிர்வாணமாக நடித்தேன், என்று நடிகை ராஜ்ஸ்ரீ தேஷ்பாண்டே தெரிவித்துள்ளார்.

Latest tamil news

#SacredGames என பெயரிடப்பட்டுள்ள இந்த வெப் சீரிஸ், நெட்ஃபிளிக்ஸ் மூலமாக உலகம் முழுவதும் வெளியிடப்பட்டுள்ளது. இதில், ராஜ்ஸ்ரீ ஜோடியாக, நவாசுதீன் சித்திக் நடித்துள்ளார். இவர்கள் 2 பேரும் படுக்கையறை காட்சி ஒன்றில் மிக நெருக்கமாக நடித்த காட்சி, தற்போது வைரலாகி வருகிறது. அதில், ராஜ்ஸ்ரீ மேலாடை இல்லாமல் அரை நிர்வாணமாக நடித்துள்ளார்.

சாமிப்படங்களில் நடித்துள்ள ராஜ்ஸ்ரீ எப்படி இப்டி ஒரு ஆபாச படத்தில் நடிக்கலாம் என்று பலரும் விமர்சித்து வருகின்றனர். இதற்குப் பதில் அளித்துள்ள ராஜ்ஸ்ரீ இப்படி எதிர்ப்புகள் கிளம்பும் என்பதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. கதைப்படி நான் அதில் ஏற்று நடித்த சுபத்ரா என்ற கேரக்டருக்கு, அப்படியான காட்சி தேவைப்பட்டது. இதை அனுராக் காஷ்யப் எனக்கு தெளிவாக விளக்கினார். அவர் மீது எனக்கு நம்பிக்கை உள்ளதால், நான் சர்ச்சைக்குரிய காட்சியில் நடித்தேன். இயக்குனர் மீது அதீத நம்பிக்கை இருந்த காரணத்தினால் அவர் நிர்வாண காட்சி என்று கூறியதும் சிறிதும் தயங்காமல் எனது ஆடைகளை களைந்தேன். 

என்னுடன் நடித்த நவாசுதீன் சித்திக்கும் சிறப்பாக ஒத்துழைப்பு தந்தார். இதர தொழில்நுட்ப கலைஞர்களும் கண்ணியமாக நடந்துகொண்டனர். கதைப்படி, நவாசுதீன் பெண்களை ஏறெடுத்தும் பார்க்காமல் செக்ஸ் உறவு கொள்வார். அதனால் அப்படி நடிப்பதில் எனக்கு தயக்கம் ஏற்படவில்லை,’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.மேலும், ‘’விவசாயிகளுக்கு பலவழிகளில் உதவி செய்துள்ளேன். அதைப்பற்றி யாரும் பாராட்டவில்லை. ஆனால், இப்படி ஒரு சர்ச்சை காட்சியில் நடித்த உடனே ரசிகர்கள் எண்ணிக்கை கூடிவிட்டது. எதிர்ப்புகளும் வருகின்றன. முன்னைவிட அதிக பிரபலமும் எனக்குக் கிடைத்துள்ளது. இது வருத்தமாக உள்ளது,’’ என்றும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Latest tamil news #Tamil Spark #Tamil news updates
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story