வெளியானது சூப்பர் ஸ்டாரின் 'பேட்ட' படத்தின் படப்பிடிப்பு காட்சிகள்; படக்குழுவினர் அதிர்ச்சி!!
rajinikanthin patta pada shooting photo
காலா படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படமான 'பேட்ட' திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்சமயம் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இதன் முதற்கட்ட படப்பிடிப்பு மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் நீண்ட நாட்களாக நடைபெற்றது. அப்பொழுது அந்த மாநில பிரபலங்கள் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அதில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானெர்ஜியின் சார்பில் அம்மாநில அமைச்சர்களும் வாழ்த்து தெரிவித்திருந்தனர். அதன் தொடர்ச்சியாக அங்கு உற்பத்தியாகும் டீக்கு ரஜினிகாந்த் பெயர் சூட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தற்பொழுது லக்னோவில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு இடையே நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அங்கு படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருவது படக்குழு மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.