நீங்கள் இதுவரை பார்த்திராத கோணத்தில் ரஜினி மற்றும் அவரது மனைவி! இணையத்தை கலக்கும் செம புகைப்படம்.
Rajinikanth Latha picture on Darbar sets Twitter alight

இயக்குனர் AR முருகதாஸ் இயக்கத்தில் முதல் முறையாக கூட்டணி சேர்ந்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தர்பார் படத்தில் நடித்துவருகிறார். படத்தில் ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துவருகிறார். படம் 2020 பொங்கல் ஸ்பெஷலாக வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மூன்று முகம் படம் போல் இந்த படத்திலும் ரஜினி போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துவருவது அனைவரும் அறிந்த ஒன்றே. படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி ரஜினி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் தர்பார் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து இன்று அருமையான புகைப்படம் ஓன்று வெளியாகியுள்ளது. அதில் சூப்பர் ஸ்டார் போலீஸ் கெட்டப்பில் இருக்க, அவரை பின்னால் இருந்து அவரது மனைவி லதா ரஜினி காந்த் கட்டி அணைத்தவாறு இருக்கும் புகைப்படம்தான் அது.
தற்போது அந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் செம வைரலாகிவருகிறது. இதோ அந்த புகைப்படம்.