கோடிகளை வாரிக்குவிக்கும் ரஜினிகாந்தின் ஜெயிலர்; 3 நாட்களில் ரூ.220 கோடி வசூல்.. அசத்தும் டைகர் முத்துவேல் பாண்டியன்.!
கோடிகளை வாரிக்குவிக்கும் ரஜினிகாந்தின் ஜெயிலர்; 3 நாட்களில் ரூ.220 கோடி வசூல்.. அசத்தும் டைகர் முத்துவேல் பாண்டியன்.!

நடிகர் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, தமன்னா, சிவராஜ்குமார், மோகன் லால், வசந்த் ரவி, விநாயகன், மிர்னா மேனன், சுனில், கிஷோர், மாரிமுத்து, சரவணன், விடிவி கணேஷ், டான்ஸர் ரமேஷ் உட்பட பலர் நடித்து வெளியான திரைப்படம் ஜெயிலர்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், அனிரூத் இசையில் உருவான ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி உலகளவில் உள்ள திரையரங்குகளில் வெளியானது. அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஐரோப்பா போன்ற நாடுகளிலும் படம் வெளியிடப்பட்டது. ரூ.200 கோடி செலவில் படம் தயாரானது.
ரஜினி ரசிகர்கள் நீண்ட ஆண்டுகள் எதிர்பார்த்த ஒரு அட்டகாசமான குடும்பம், காமெடி, அதிரடி ஆக்சன் காட்சிகளுடன் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படம், பல ஆண்டுகள் ஏக்கத்தில் இருந்த ரஜினி ரசிகர்களுக்கு சரியான வாய்ப்பாக அமைந்தது.
படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் வசூலும் குவிந்து வருகிறது. ஜெயிலர் வெளியாகி நேற்றோடு 3 நாட்கள் நிறைவடைந்துவிட்ட நிலையில், தமிழ்நாடு மற்றும் சர்வதேச அளவில் ரூ.220 கோடி வசூல் செய்துள்ளது உறுதியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் முதல் மூன்று நாட்களை பொறுத்தமட்டில் மொத்தமாக ரூ.76.09 கோடி (ரூ.29.46, ரூ.20.25, ரூ.26.38) வசூல் செய்துள்ளது. சர்வதேச அளவில் ரூ.220.53 கோடி (ரூ.95.78, ரூ.56.24, ரூ.68.51) வசூல் செய்துள்ளது.
படத்தில் நடிகர்கள் மோகன்லால் & ஷிவ்ராஜ்குமார் @ ஷிவண்ணாவின் நடிப்பு பெரிதளவும் பாராட்டப்பட்டுள்ள நிலையில், ஷிவ்ராஜ்குமாரை ரசிகர்கள் கொண்டாடும் வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.