சூப்பர்ஸ்டார் ரஜினிகாந் எடுத்த அதிர்ச்சி முடிவால் கதறும் ரசிகர்கள் கூட்டம்! தமிழ் சினிமாவிற்கு அடுத்தடுத்து விழும் பேரிடி.!!!
ரஜினிகாந்த் தனது 175வது திரைப்படத்துடன் சினிமாவில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் தனது 50 ஆண்டுகால திரைப்பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து, 75 வயதிலும் தொடர்ந்து புதிய படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், அவரது 175வது திரைப்படத்துடன் திரையுலகிற்கு விடை கொடுக்கலாம் என்ற தகவல்கள் சினிமா வட்டாரங்களில் பரவி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. எனினும், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
அடுத்தடுத்த படங்களில் பிஸியாகும் ரஜினி
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, தற்போது வெளியீட்டுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து, இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகும் ‘தர்மன்’ படத்தில் மாஸான மருத்துவர் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இந்த படம் அவரது 173வது திரைப்படமாகும்.
இதையும் படிங்க: ஷாக் நியூஷ்! திடீரென சினிமாவிலிருந்து விலகும் திரிஷா! வெளியான அந்த ரகசிய காரணம்! ஒட்டுமொத்த திரையுலகமே அதிர்ச்சியில்...!!!
174வது படத்தில் கமலுடன் மெகா கூட்டணி?
‘தர்மன்’ படத்தைத் தொடர்ந்து, மீண்டும் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், உலகநாயகன் கமல்ஹாசனுடன் இணைந்து ரஜினிகாந்த் தனது 174வது படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கூட்டணி குறித்த தகவல் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
‘தலைவர் 175’ குறித்து பரவும் தகவல்
இதற்கிடையில், தலைவர் 175 திரைப்படமே ரஜினிகாந்தின் கடைசி படமாக இருக்கும் என்றும், அதன்பிறகு அவர் சினிமாவில் இருந்து ஓய்வு பெறலாம் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு அரசியலுக்குள் வருவதற்கான முடிவை மாற்றிய ரஜினிகாந்த், தற்போது திரையுலகிலிருந்தும் விலக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுவது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது. இருப்பினும், இந்த தகவலுக்கு இதுவரை ரஜினிகாந்த் தரப்பிலோ அல்லது அவரது குழுவினரிடமோ எந்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலும் வெளியாகவில்லை.
இதையும் படிங்க: செந்தில் பாலாஜிக்கு அடுத்தடுத்து வரும் ஆஃபர்.! பாஜகவும் களத்தில் இறங்கிட்டு... மாநிலம் தலைவர் பதவியா? திமுகவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி..!!!