கொரோனா நிவாரண நிதி! நம்ப சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் முதல்வரிடம் கொடுத்த 50 லட்சம்! மக்களிடம் விடுத்த வேண்டுகோள்!
நடிகர் ரஜினிகாந்த் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சத்தை வழங்கினார்.
நடிகர் ரஜினிகாந்த் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சத்தை வழங்கினார்.
தமிழகத்தில் கொரோனா பரவலின் 2ஆம் அலை தற்போது அதித்தீவிரமாக பரவி வருகிறது. தற்போது தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு தமிழகத்தில் 31 ஆயிரத்திற்கு மேலாக அதிகரித்து வருகிறது. கொரோனவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து கொரோனா நிவாரண நிதியாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சத்தை வழங்கினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த் “தமிழக அரசின் கட்டுப்பாடுகளை மக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். அப்போது தான் கொரோனாவை ஒழிக்க முடியும்” என்று பொதுமக்களிடம் வேண்டும்கோள் விடுத்துள்ளார்.
மேலும் திரையுலகில் நடிகர் சிவக்குமார், சூர்யா, கார்த்தி கொரோனா நிவாரணத்திற்கு ரூ.1 கோடி நிதி அளித்திருந்த நிலையில், உதயநிதி ஸ்டாலின், தல அஜித், ரஜினியின் மகள் சவுந்தர்யா உள்ளிட்ட திரைத்துறையினர் பலரும் நிதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.