எந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை? ரஜினி கூறியதை கேட்டு மிரண்டுபோன ரசிகர்கள்!
Rajini would like to act as transgender

இயக்குனர் AR முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடித்துள்ள திரைப்படம் தர்பார். வரும் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் இந்த படத்தின் ட்ரைலர் நேற்று உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது. படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு போலீஸ் கதாபாத்திரத்தில் ரஜினி நடித்துள்ளார்.
இந்நிலையில் தர்பார் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா மும்பையில் நேற்று நடந்தது. இதில் பேசிய ரஜினி, போலீஸ் வேடம் எனக்கு சுத்தமாக பிடிக்காது என்றும், மூன்று முகம் போலீஸ் கதாபாத்திரத்தை விட தர்பார் கதாபாத்திரம் செம மாஸாக இருக்கும் என ரஜினி கூறினார்.
இதற்கிடையில், எந்த காதாபாத்திரத்தில் நடிக்க நீங்க விரும்புகிறீர்கள் என செய்தியாளர் ஒருவர் ரஜினியிடம் கேட்டார், அதற்கு திருநங்கை வேடத்தில் நடிக்க தான் ஆசை படுவதாக கூறி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார் ரஜினி. இந்த விழாவில், படத்தின் இயக்குனர் AR முருகதாஸ், இசை அமைப்பாளர் அனிருத் ஆகியோர் கலந்துகொண்டனர்.