×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

"நீங்க இந்த படத்துல நடிங்க" அஜித்தை வற்புறுத்திய ரஜினி..

நீங்க இந்த படத்துல நடிங்க அஜித்தை வற்புறுத்திய ரஜினி..

Advertisement

ஹைதராபாதில் பிறந்த நடிகர் அஜித், 1992ம் ஆண்டு ப்ரேமபுத்தகம் என்ற தெலுங்கு படத்தில் தான் அறிமுகமானார். அதன்பின்னர் தமிழில் 'அமராவதி' படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால் அந்த படம் சரியாக போகவில்லை.

அதன்பிறகு சில படங்களில் நடித்திருந்தாலும், எதுவும் அஜித்திற்கு பெயர் சொல்லிக்கொள்ளும்படி அமையவில்லை. பின்னர், 1995ல் வெளியான "ஆசை" திரைப்படம் தான் இவருக்கு பெயர் பெற்றுத் தந்தது. அதன்பின்னர் 1998ல் அஜித் நடித்த "காதல் மன்னன்" படம் பெரும் வெற்றி பெற்றது.

இடையில், நிறைய பைக் ரேஸ்களில் கலந்து கொண்டதால், அஜித்தால் தொடர்ந்து படங்களில் நடிக்க முடியாமல் போனது. இந்நிலையில் அஜித்தின் 50ஆவது படமான "மங்காத்தா" சூப்பர் ஹிட்டானது. அதில் அஜித் நெகடிவ் ரோலில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அஜித் ஒருமுறை ரஜினியை சந்தித்த போது, ரஜினி அஜித்திடம் "என்னோட பில்லா படத்துல நீங்க நடிங்க" என்றும், "உங்களுக்கு நெகடிவ் ரோல் கச்சிதமா இருக்கும், அதை முயற்சி பண்ணுங்க" என்றும் ரஜினி அஜித்திடம் கூறியதால் தான் அஜித் 'மங்காத்தா' படத்தை ஒத்துக்கொண்டாராம்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Ajith #rajini #Kollywood #cinema #Viral
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story