தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அடேங்கப்பா..அண்ணாத்த ஸ்பெஷலா! ஹோட்டல் நடத்தும் ரஜினி ரசிகர் செய்த காரியத்தை பார்த்தீங்களா!!

அடேங்கப்பா..அண்ணாத்த ஸ்பெஷலா! ஹோட்டல் நடத்தும் ரஜினி ரசிகர் செய்த காரியத்தை பார்த்தீங்களா!!

Rajini fan sale 1 dosa for 1 rupee in trichy Advertisement

தமிழ் சினிமாவில் ஏராளமான குடும்ப மற்றும் அதிரடி ஆக்ஷன் மாஸ் திரைப்படங்களில் நடித்து முன்னணி நட்சத்திரமாக சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினி. இவருக்கென உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. மேலும் இவரது பிறந்தநாள் மற்றும் படங்கள் வெளியாகும் நாட்களை அவர்கள் கோலாகலமாக திருவிழாக்களை போல கொண்டாடுவர்.

இந்த நிலையில் நடிகர் ரஜினி தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த என்ற திரைப்படத்தில்  நடித்துள்ளார். இத்திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை நவம்பர் 4ம் தேதி ரிலீசாக உள்ளது. இதன் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

Annathe

இந்த நிலையில் அண்ணாத்த திரைப்படம் வெளியாவதை கொண்டாடும் வகையில் உணவகம் நடத்திவரும் திருச்சியை சேர்ந்த தீவிர ரஜினி ரசிகர் ஒருவர் தனது ஹோட்டலில் ஒரு தோசை வெறும் ஒரு ரூபாய் என்று விற்பனை செய்துள்ளார். மேலும் அண்ணாத்த படம் வெளியாவதை முன்னிட்டு இத்தகைய சிறப்பு சலுகையை அளித்ததாக அவர் கூறியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த அப்பகுதி மக்கள் ஆர்வத்தோடு அங்கு விரைந்து வந்து சாப்பிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Annathe #rajini #dosa
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story