×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வாவ்.. ராஜா ராணி 2 ஸ்ரிக்ட் மாமியாருக்கு இம்புட்டு அழகான மகளா! பேரழகில் சொக்கியிழுக்குறாரே!! வைரலாகும் கியூட் புகைப்படம்!!

ராஜா ராணி சீரியல் நடிகை பிரவீனா தனது மகளுடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற பிரியமானவள் தொடரில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகை பிரவீனா. இவர் மலையாளத்திலும் ஏராளமான தொடர்களில் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் சன்டிவியில் மகராசி தொடரில் மாமியாராக நடித்து ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தார்.

அந்த தொடரிலிருந்து பாதியிலேயே விலகிய பிரவீனா தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியலில் ஆலியா மானசாவிற்கு ஸ்ரிக்ட் மாமியாராக நடித்து வருகிறார். மேலும் சினிமாவில் களமிறங்கிய அவர் நடிகர் கார்த்தியுடன் தீரன் அதிகாரம் ஒன்று, விக்ரமுடன் சாமி 2, ஜெயம் ரவியின் கோமாளி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

நடிகை பிரவீனாவிற்கு கௌரி நாயர் என்ற மகள் உள்ளார். இந்நிலையில் அவர் தனது மகளுடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனைக் கண்ட ரசிகர்கள் வாவ் அப்படியே அம்மாவைப் போல இருக்கிறாரே என கமெண்டு செய்து வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Praveena #daughter #gowri nayar
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story