தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

3 கோடி..! கொரோனா பாதிப்பு நிவாரண நிதிக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் ரூ.3 கோடி நிதியுதவி.!

Raghava lawrence donate 3 crores for corono relief fund

raghava-lawrence-donate-3-crores-for-corono-relief-fund Advertisement

கொரோனா தடுப்பு நடவடிக்கை நிவாரண நிதியாக 3 கோடி அறிவித்துள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ்.

உலகம் முழுவதும் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் காரணமாக பலர் உயிர் இழந்து வருகின்றனர். கொரோனாவை கட்டுப்படுத்த அணைத்து நாடுகளும் தீவிரமாக போராடிவருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில், நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனாவை எதிர்த்து போராட மக்கள் நிதி உதவி செய்யுமாறு பிரதமர் கேட்டுக்கொண்டார். இதனை அடுத்து பிரபலங்கள் தொடங்கி சாதாரண மக்கள் வரை பலரும் தங்களால் முடிந்ததை நிவாரண நிதியாக வழங்கிவருகின்றனர்.

corono

அந்த வகையில், பிரபல தமிழ் நடிகர் ராகவா லாரன்ஸ் கொரோனா தடுப்பு நிவாரண நிதியாக மொத்தம் 3 கோடிகளை அறிவித்துள்ளார். அதில், பிரதமர் நிவாரண நிதி உதவியாக ரூ.50 லட்சம், தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம் மற்றும் படப்பிடிப்பு ரத்தால் பாதிக்கப்பட்டு வேலைஇழந்த சினிமா தொழிலாளர்களுக்கு ரூ.50 லட்சம்.

மேலும், நடன இயக்குநர்கள் சங்கத்துக்கு ரூ.50 லட்சம், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.25 லட்சம், வாழ்வாதாரத்தை இழந்துவாடும் தினக்கூலி தொழிலாளர்களுக்கு ரூ.75 லட்சம் நிதி உதவி தருவதாக கூறியுள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#corono #ragava lawrence
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story