வாய்விட்டு உதவி கேட்ட நடிகர் ராகவா லாரன்ஸ்..! உடனே சம்மதம் தெரிவித்த நடிகர் விஜய்..! வைரலாகும் டிவிட்டர் பதிவு.!
Ragava lawrence asked help from vijay

நடிகர் ராகவா லாரன்ஸ் கேட்ட உதவிக்கு உடனே சம்மதம் தெரிவித்துள்ளார் நடிகர் விஜய். மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவர் விஜய்யின் மாஸ்டர் பட பாடலை மிக அருமையாக பாடியிருப்பதாகவும், அந்த இளைஞருக்கு விஜய் மற்றும் அனிருத் வாய்ப்பு தரவேண்டும் எனவும் ராகவா லாரன்ஸ் கூறியிருந்தார்.
இதனிடையே அன்னையர் தினத்தை முன்னிட்டு வாழ்த்து செய்தியுடன் பதிவு ஒன்றை பகிர்ந்துள நடிகர் ராகவா லாரன்ஸ், இதுகுறித்து நேற்று தான் நடிகர் விஜய்யிடம் பேசியதாகவும், ஊரடங்கு முடிந்ததும் அந்த மாற்றுத்திறனாளி நபரை நேரில் அழைத்துவருமாறும், அவர் பாடுவதை நேரில் கேட்க ஆவலுடன் இருப்பதாகவும் விஜய் தெரிவித்ததாக லாரன்ஸ் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அந்த மாற்று திறனாளி நபருக்கு அனிருத் இசையில் பாட வாய்ப்பு கிடைக்க தான் உதவி செய்வதாகவும் விஜய் தெரிவித்துள்ளதாகவும் ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார் . மாற்றுத்திறனாளி இளைஞரின் கனவை நனவாக்கும் நண்பன் விஜய் மற்றும் அனிருத்துக்கு தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துள்கொள்வதாகவும், சேவையே கடவுள் என்றும் ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.