×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நடிகை ராஷ்மிகாவிற்கு இப்படியொரு ஆசையா? நிறைவேறுமா? உற்சாகத்துடன் அவரே கூறிய தகவல்!

radhmika-like-to-act-in-sri-devi-biography

Advertisement

கன்னட சினிமாவில் கிரிக் பார்ட்டி என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.  அதனை தொடர்ந்து அவர் தெலுங்கில் விஜய் தேவரக்கொண்டாவுடன் இணைந்து  கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். மேலும் இருவரும் மீண்டும் ஜோடிசேர்ந்து நடித்த டியர் காம்ரேட் படமும் நல்ல வரவேற்பை பெற்றது.

ரஷ்மிகா தமிழில் நேரடியாக ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை என்றாலும் அவருக்கென ஏகப்பட்டட தமிழ் ரசிகர்கள் உள்ளனர். மேலும்  தற்போது அவர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிக்கும் சுல்தான் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பதன் மூலம் அறிமுகமாக உள்ளார்.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் நடிகை ராஷ்மிகா ரசிகர்களுடன் கலந்துரையாடியுள்ளார். மேலும் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். அப்பொழுது உங்களுக்கு மறைந்த நடிகைகள் ஸ்ரீதேவி மற்றும் சவுந்தர்யா யாருடைய வாழ்க்கை கதை படங்களில் நடிக்க ஆர்வம் என கேட்டுள்ளனர். அதற்கு  ராஷ்மிகா ஸ்ரீதேவி வேடத்தில் நடிக்கதான் ஆசைப்படுகிறேன். அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவரது கதாபாத்திரத்தில் நடிப்பது எனது கனவு என கூறியுள்ளார். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#rashmika #Sri devi
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story