×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இப்படி ஒரு துரோகமா? ரூ.43 கோடி செக் மோசடி...! சொந்த அக்கா அம்பிகா மீது புகார் கொடுத்த தங்கை ராதா... அடுக்கடுக்கான பரபரப்பு குற்றச்சாட்டுகள்...!!!

நடிகை ராதா, தனது அக்கா அம்பிகா மற்றும் சகோதரர் மீது ரூ.43.62 கோடி பழைய காசோலைகளை பயன்படுத்தி மோசடி செய்ய முயன்றதாக சென்னை காவல் ஆணையரிடம் புகார்

Advertisement

80களில் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளாக வலம் வந்த சகோதரிகள் அம்பிகா, ராதா இடையே தற்போது பண விவகாரம் தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டுள்ளது. நடிகை ராதா, தனது அக்கா அம்பிகா நாயர் மற்றும் சகோதரர் மல்லிகார்ஜுனா குஞ்சன் நாயர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். சுமார் ரூ.43.62 கோடி மதிப்பிலான பழைய காசோலைகளை பயன்படுத்தி பணம் பெற முயன்றதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

பழைய காசோலைகள் மூலம் பணம் பெற முயற்சி

போரூரில் “RR Gardens” என்ற பெயரில் தொழில் நடத்தி வரும் ராதா, அவசரத் தேவைக்காக தனது அறையில் கையெழுத்திட்டு வைத்திருந்த ஐடிபிஐ வங்கியின் பழைய காசோலைகள் சில காணாமல் போனதாக தெரிவித்துள்ளார். பயன்பாட்டில் இல்லாத அந்த 5 காசோலைகளிலும் தொகையை நிரப்பி, அம்பிகாவின் பெயரில் பணமாக்க முயற்சி செய்யப்பட்டதாக புகாரில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நடிகர் திலகம் சிவாஜியின் மகளும், நடிகர் பிரபுவின் மூத்த சகோதரியுமான சாந்தி காலமானார்! அதிர்ச்சியில் திரையுலகினர்....!!!

காசோலைகள் தொடர்பாக வங்கி நிர்வாகம் மின்னஞ்சல் மூலம் ராதாவுக்கு தகவல் தெரிவித்ததாகவும், இதையடுத்து பணம் பெறும் முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக சுமார் ரூ.43.62 கோடி அளவுக்கு மோசடி செய்ய முயற்சி நடந்ததாக ராதா தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

வீட்டில் நகைகள், ஆவணங்கள் குறித்து குற்றச்சாட்டு

இதுதவிர, வளசரவாக்கத்தில் உள்ள தனது வீட்டின் அறைக்குள் சட்டவிரோதமாக நுழைந்து நகைகள், சொத்துப் பத்திரங்கள் மற்றும் வங்கி ஆவணங்களை எடுத்துப் பார்ப்பதாகவும் ராதா குற்றம் சாட்டியுள்ளார். தனது அனுமதியின்றி அந்த ஆவணங்கள் தொடர்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் புகாரில் தெரிவித்துள்ளார்.

காவல்துறை விசாரணை

ராதா அளித்துள்ள புகாரின் அடிப்படையில், சென்னை காவல்துறையினர் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். காசோலைகள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டன, அவற்றை யார் கையாண்டனர் என்பது உள்ளிட்ட விவரங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ராதா அம்பிகா விவகாரம் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் காவல்துறை விசாரணையின் முடிவைப் பொறுத்தே இருக்கும்.

 

இதையும் படிங்க: துக்க வீட்டிலும், சுப நிகழ்ச்சியிலும் விஜய் கூடவே இருக்கும் த்ரிஷா! அப்படி என்ன உறவு? அரசியலில் கண்ணியத்தை பாதிக்கிறது.... அதிமுக அமைச்சர் சண்முகநாதன் கடும் விமர்சனம்!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#ராதா அம்பிகா #Rs 43.62 crore #பழைய காசோலை மோசடி #chennai police #RR Gardens
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story