×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ராஜா ராணி 2 சீரியலில் நடிக்கும் புதிய சந்தியாவை வரவேற்கும் அழகிய புரொமோ வீடியோ இதோ....!

ராஜா ராணி 2 சீரியலில் நடிக்கும் புதிய சந்தியாவை வரவேற்கும் அழகிய புரொமோ வீடியோ இதோ....!

Advertisement

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் தொடர் ராஜாராணி 2. ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற இந்த சீரியலில் ஹீரோவாக சரவணன் கதாபாத்திரத்தில் சித்து, ஹீரோயினாக சந்தியா கதாபாத்திரத்தில் ஆலியா நடிக்கிறார்.

ஆலியா மானசா ராஜாராணி முதல் பாகத்திலும் ஹீரோயினாக நடித்தார். மேலும் அதில் ஹீரோவாக கார்த்திக் என்ற கதாபாத்திரத்தில் சஞ்சீவ் நடித்தார். சீரியலில் கணவன்,மனைவியாக நடித்த இருவரும் நிஜத்திலும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு ஐலா என்ற அழகிய மகள் உள்ளார்.

இந்த நிலையில் ஆலியா தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளார். அவருக்கு இந்த மாத இறுதியில் குழந்தை பிறந்துவிடும் என்பதால் அவர் சிறிது காலம் சீரியலில் நடிப்பதை நிறுத்தியுள்ளார். குழந்தை பிறந்து சில மாதங்களுக்கு பிறகு மீண்டும் ஆல்யா, சந்தியா கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்குவாராம். ஆல்யா மானசாவிற்கு பதிலாக சந்தியா வேடத்தில் ரியா என்பவர் நடிக்க உள்ளார். இவர் சென்னையைச் சேர்ந்த மாடல் ஆவார். இந்நிலையில் புதிய சந்தியாவை வரவேற்கும் விதமாக ராஜா ராணி 2 தொடரின் புதிய புரொமோ  வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.  தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி  வருகிறது. இதோ  அந்த வீடியோ...

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Raaja raani2 #Promo #video
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story