×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஜெயலலிதாவின் கம்பீரமான வரலாற்றை கண்முன்னே கொண்டுவந்த குயின் ட்ரைலர்! மிரட்டலான வீடியோ இதோ!

queen trailer released

Advertisement

தனது சினிமாபயணத்தின் மூலம் தமிழக மக்களிடம் அறிமுகமாகி,  பின்னர் அரசியலில் பல்வேறு இன்னல்களையும், சவால்களையும்  சந்தித்து அதிமுக கட்சியின் பொது செயலாளராக மாறி தமிழகத்தை பலமுறை ஆட்சி செய்தவர் இரும்பு பெண்மணி  ஜெயலலிதா. இவர் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி உயிரிழந்தார். இவரின், மூன்றாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

அதனை தொடர்ந்து  ஜெயலலிதாவின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க பாரதிராஜா, பிரியதர்ஷினி , லிங்குசாமி மற்றும் ஏ.எல் விஜய் உள்ளிட்ட பல இயக்குனர்கள் தீவிரம் காட்டினர். இதற்கிடையில் இயக்குனர் விஜய்  தற்போது ஜெயலலிதாவின் வாழ்க்கையை தலைவி என்ற பெயரில் படமாக எடுத்து வருகிறார். இயக்குனர் பிரியதர்ஷினியும் அயர்ன் லேடி’ என்ற தலைப்பில் படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் இயக்குனர் கௌதம் வாசுதேவமேனன் ஜெயலலிதாவின் வாழ்க்கையை குயின் எனும் வெப் சீரியலாக உருவாக்கியுள்ளார். இதில் நடிகை ரம்யா கிருஷ்ணன் ஜெயலலிதாவாக நடிக்கிறார். மேலும் மலையாள நடிகர் இந்திரஜித் சுகுமாரன் எம்ஜிஆராக நடித்துள்ளார். எம்.எக்ஸ் பிளேயர் தயாரிக்கும் இந்த வெப் சீரிஸின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

அதில் ஜெயலலிதாவின் பள்ளிப் பருவம், திரைவாழ்க்கை, அரசியல் பங்களிப்பு என ஒவ்வொன்றும் இடம்பெற்றுள்ளது. இந்த ட்ரைலர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#jayalalitha #queen #trailar
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story