எல்கேஜி இயக்குனருக்கு இப்படியொரு பரிசா? தயாரிப்பாளர் கொடுத்த மாபெரும் சர்ப்ரைஸ் என்ன தெரியுமா?
producer gifted car to lkg director

தமிழில் பிரபு இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் எல்கேஜி. இதில் ஆர்.ஜே.பாலாஜி மற்றும் பிரியா ஆனந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.
மேலும் இந்த படத்தில் நாஞ்சில் சம்பத், ஜே.கே.ரித்தீஷ், ராம்குமார் கணேசன், மயில்சாமி, ஆனந்த்ராஜ், மனோபாலா, அனந்த் வைத்தியநாதன், சந்தானபாரதி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மேலும் படத்தின் வசூல் 15 கோடியை தாண்டியுள்ளது.இந்நிலையில் அந்த வெற்றியை படக்குழுவினர் கேக் வெட்டி கோலாகலமாக கொண்டாடினர்.
மேலும் படத்தை சிறந்த முறையில் இயக்கிய இயக்குநர் பிரபுவுக்கு தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷ் புதிய கார் ஒன்றை பரிசாக அளித்து மகிழ்வித்தார். மேலும் படக்குழுவினருக்கும் தயாரிப்பு தரப்பில் சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.