பிரியங்கா சோப்ராவின் கூந்தல் அடர்த்திக்கு இதான் காரணமா.? வடித்த கஞ்சியில் இருக்கும் அந்த அற்புதம்! அவரது தாயார் மது சோப்ரா வெளியிட்ட ஹேர் மாஸ்க் சீக்ரெட்.!!!
பிரியங்கா சோப்ராவின் அடர்த்தியான மற்றும் பளபளப்பான கூந்தலுக்குப் பின்னால் இருக்கும் இயற்கை ஹேர் மாஸ்க் ரகசியத்தை அவரது தாயார் மது சோப்ரா பகிர்ந்துள்ளார்.
பாலிவுட் மற்றும் ஹாலிவுட்டில் தனக்கென தனி இடத்தைப் பிடித்துள்ள நடிகை பிரியங்கா சோப்ராவின் ஆரோக்கியமான கூந்தல் எப்போதும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. தற்போது அவரது அடர்த்தியான முடியின் ரகசியத்தை தாயார் மது சோப்ரா சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
40 வயதை கடந்த பின்னரும் கூந்தலின் பொலிவையும் அடர்த்தியையும் பராமரித்து வரும் பிரியங்கா சோப்ரா பயன்படுத்தும் இயற்கை ஹேர் மாஸ்க் குறித்த தகவலை மது சோப்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த ஹேர் மாஸ்க் தயாரிப்பில் தேங்காய் எண்ணெய், வெந்தயம், ரோஸ்மேரி இலைகள், வடித்த கஞ்சி மற்றும் ஊறவைத்த சியா விதைகள் பயன்படுத்தப்படுகின்றன.
இதையும் படிங்க: வேலை மிஞ்சம்.... இனி டாய்லெட்டை கை வலிக்க தேய்க்க வேணாம்! இந்த ஒரு பொருள் மட்டும் வீட்டில் இருந்தால் போதும்! வைரலான மேஜிக் ட்ரிக்!
ஹேர் மாஸ்க் தயாரிக்கும் முறை
முதலில் சியா விதைகளை நன்றாக ஊறவைத்து ஜெல்லி போன்ற பதத்திற்கு கொண்டு வர வேண்டும். பின்னர் அதனுடன் தலா ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய், வெந்தயம், ரோஸ்மேரி இலைகள் மற்றும் வடித்த கஞ்சி சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும். தயாரான கலவையை தலையின் வேர்க்கால்கள் முதல் முடியின் நுனி வரை சமமாகப் பூசி ஒரு மணி நேரம் ஊற விட வேண்டும்.
அதன்பின், வழக்கமாக பயன்படுத்தும் ஷாம்பூவால் தலைமுடியை அலசினால், பளபளப்பான கூந்தல் மற்றும் மென்மையான முடியைப் பெற உதவும் என கூறப்படுகிறது.
ஒவ்வொரு பொருளின் சிறப்பு என்ன?
இந்த ஹேர் மாஸ்க்கில் இடம்பெறும் ஒவ்வொரு பொருளும் தனித்துவமான நன்மைகளை வழங்குகின்றன. தேங்காய் எண்ணெய் முடி வேர்களைப் பாதுகாக்க உதவுகிறது. வெந்தயத்தில் உள்ள புரோட்டீன் மற்றும் இரும்புச்சத்து முடி வளர்ச்சிக்கு ஆதரவாக செயல்படுகின்றன. ரோஸ்மேரி இலைகள் உச்சந்தலையின் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி முடி வளர்ச்சியை ஊக்குவிப்பதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மருத்துவர்களின் அறிவுரை
சியா விதைகளில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களும், வடித்த கஞ்சியில் உள்ள அமினோ அமிலங்களும் முடி உடைவதை குறைக்க உதவுகின்றன. எனினும், எந்தவொரு புதிய ஹேர் மாஸ்க் அல்லது அழகுப் பராமரிப்பு முறையையும் பயன்படுத்துவதற்கு முன், தோலில் சிறிய பகுதியில் ‘பேட்ச் டெஸ்ட்’ செய்து பார்ப்பது பாதுகாப்பான நடைமுறை என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
இதையும் படிங்க: நல்ல தூக்கத்தையும் உடல் நலத்தையும் பெற வேண்டுமா? இதோ இந்த 10-3-2-1 ரகசியத்தை உடனே செய்யுங்க...அடுத்து நடக்கும் மேஜிக்கை பாருங்க!!!