×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அடேங்கப்பா! இவ்வளவா.. ஆடம்பர வீடு வாங்கிய ப்ரியங்கா சோப்ரா! விலையை கேட்டா தலைச்சுற்றி போவீங்க!!

priyanga chopra got new house

Advertisement

தமிழ் சினிமாவில் தளபதி விஜய்க்கு ஜோடியாக  தமிழன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை பிரியங்கா சோப்ரா. இவர் பாலிவுட் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.மேலும் அங்கு அவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது.  மேலும் அவர் தற்போது ஹாலிவுட் படத்தில் நடிப்பதற்கும் அதிகளவில் கவனம் செலுத்தி வருகிறார்.

ப்ரியங்கா சோப்ரா அமெரிக்க நடிகரும், பாப் பாடகருமான நிக் ஜோன்ஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.  நிக் ஜோன்ஸ் பிரியங்கா சோப்ராவை விட 10 வயது குறைந்தவர். மேலும் சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் பிசியாக இருக்கும் பிரியங்கா சோப்ரா அவ்வப்போது தனது கவர்ச்சி மற்றும் கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருவார்.

இந்நிலையில் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமான இந்த ஜோடி தற்போது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ், சான் பெர்னாண்டோ பகுதியில் மிக ஆடம்பரமான, பிரமாண்டமான வீடு ஒன்றை வாங்கியுள்ளனர். இதன் விலை 20 மில்லியன் டாலர். அதாவது இந்திய மதிப்பில் 144 கோடி ஆகும்.

20 ஆயிரம் சதுரஅடி பரப்பளவை கொண்ட இந்த வீட்டில் 7 படுக்கையறைகள், 11 குளியலறைகள், நீச்சல் குளம், சினிமா தியேட்டர், ரெஸ்டாரண்ட் பார், உள்ளரங்கம், உடற்பயிற்சி மையம் உள்ளிட்ட ஏராளமான வசதிகள் உள்ளது. இதனை கண்டதும் ரசிகர்கள் தலைசுற்றிப்போயுள்ளனர்.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#priyanga chopra #new house
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story