செம..... வேற லெவல்! நடிகை பிரியா வாரியருக்குள் இப்படி ஒரு திறமையா? வாயடைத்துப்போன ரசிகர்கள்.....
ஒரு ட்ரெண்டிங் பாடலை தனது பாணியில் பாடிய பிரியா வாரியர் வெளியிட்ட புதிய வீடியோ இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
தென்னிந்திய ரசிகர்களை முதல் பார்வைக்கே கவர்ந்த பிரியா வாரியர், தொடர்ந்து தனித்துவமான அழகின் மூலம் சமூக வலைத்தளங்களில் பேரதிர்வை ஏற்படுத்தி வருகிறார்.
அடார் லவ் முதல் குட் பேட் அக்லீ வரை
ஒரு அடார் லவ் திரைப்படத்தின் கண்சிமிட்டல் காட்சியால் இந்தியா முழுவதும் பேசப்பட்டவர் நடிகை பிரியா வாரியர். அதன் பின்னர் தனுஷ் இயக்கிய ‘NEEK’ படத்திலும், அஜித் நடித்த குட் பேட் அக்லீ படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார்.
குட் பேட் அக்லீ படத்தில் அர்ஜுன் தாஸுடன் இணைந்து நடித்த அவர், ‘தொட்டு தொட்டு பேசும் சுல்தானா’ பாடலில் ஆடிய நடனம் ரசிகர்களிடம் மிகப்பெரிய ஹிட்டாகியது. அதன் பின்னர் சமூக வலைத்தளங்களில் அதிகம் தேடப்படும் நடிகையென இவருக்கு தனி பிரபல்யம் ஏற்பட்டது.
இதையும் படிங்க: என்னம்மா இப்படியெல்லாம் செய்ற! நீச்சல் குளத்தில் இருந்து வீடியோ வெளியிட்ட ரக்ஷிதா மகாலட்சுமி! வைரலாகும் குளுகுளு கும்மால வீடியோ.,.
ட்ரெண்டிங் பாடலை கவர்ந்திழுக்கும் வகையில்
சினிமாவுக்கு அப்பாலும் சமூக ஊடகங்களில் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வரும் அவர், சமீபத்தில் ஒரு Trending Song-ஐ தனது குரலில் தனித்துவமாக பாடிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இந்த பாடல் வீடியோ தற்போது இணையத்தில் மாபெரும் வைரலாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இசை, நடிப்பு, சமூக வலைத்தள தளங்களின் மூலமும் ரசிகர்களை தொடர்ந்து ஈர்த்து வரும் பிரியா வாரியர், எதிர்கால திட்டங்களிலும் வித்தியாசமான தேர்வுகளை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய திருப்பாச்சி பட நடிகை! வைரலாகும் புகைப்படங்கள்....