நல்ல சாப்பாட்டுக்கே வழியில்லை! பாலைவனத்தில் சிக்கிதவிக்கும் நடிகர் பிருத்விராஜ்!
Prithviraj tweet about struggling jordan
தமிழ் சினிமாவில் மொழி, கனா கண்டேன், சத்தம் போடாதே, வெள்ளித்திரை, நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் பிருத்விராஜ். இவர் ஏராளமான மலையாள சினிமாவில் நடித்து முன்னணி நடிகராக உள்ளார்.
இந்நிலையில் பிரித்விராஜ் தற்போது ஆடு ஜீவிதம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு ஜோர்டானில் உள்ள வாடிரம் பாலைவனப் பகுதியில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் பிருத்விராஜ் உட்பட 57 பேர் கொண்ட குழு ஜோர்டான் பகுதிக்கு சென்று தற்போது கொரோனா ஊரடங்கால் விமானங்கள் முடக்கப்பட்டதால் ஊர் திரும்ப முடியாமல் அங்கேயே தவித்து வருகிறது.
இந்நிலையில் ஊர் திரும்பமுடியாமல் அவதிப்பட்டு வரும் பிரித்விராஜ் புத்தாண்டை முன்னிட்டு தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கடந்த வருடம் புத்தாண்டு தினத்தில் குடும்பத்தாருடன் ருசியான மதிய உணவை சாப்பிட்டேன். ஆனால் இந்த ஆண்டு நல்ல சாப்பாட்டுக்கு வாய்ப்பு இல்லாமல், பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் உறவுகளை பிரிந்து வாடுகிறேன். விரைவில் எல்லாம் முடிந்து ஒன்று சேரும் காலம் வரும் எனத் தெரிவித்துள்ளார். மேலும் மனைவியோடு உணவு சாப்பிடும் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.