×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இதுக்குதான்யா பிரிட்டிஷ் பொண்ணை லவ் பண்ணினேன்.. ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்த பிரின்ஸ் ட்ரைலர்!

இதுக்குதான்யா பிரிட்டிஷ் பொண்ணை லவ் பன்னினேன்.. ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்த பிரின்ஸ் ட்ரைலர்!

Advertisement

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் டான் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக அனுதீப் இயக்கத்தில் பிரின்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகும் இப்படத்தில் ஹீரோயினாக உக்ரைன் நடிகை மரியா ரியாபோஷப்கா நடித்துள்ளார். 

மேலும் இந்த படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி உள்ளிட்ட பலரும் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். பிரின்ஸ் திரைப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 21ஆம் தேதி வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

இப்படம் தமிழக இளைஞனுக்கும், பிரிட்டிஷ் பெண்ணுக்கும் இடையேயான காதல் கதையை மையமாக கொண்டது. மேலும் இப்படம் முழுவதும் காமெடி ஜானரில் உருவாகியுள்ளது. இந்நிலையில்  பிரின்ஸ் படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Prince #trailer #sivakarthickeyan
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story