வெளியீடுக்கு முன்பே ரூ.200 கோடி வசூல் செய்த பிரபாஸின் சலார் திரைப்படம்; மாஸ் காண்பிக்கும் பிரசாந்த் நீல்.!
வெளியீடுக்கு முன்பே ரூ.200 கோடி வசூல் செய்த பிரபாஸின் சலார் திரைப்படம்; மாஸ் காண்பிக்கும் பிரசாந்த் நீல்.!
இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில், பிரபாஸ் கதாநாயகனாக இணைந்து உருவாகி வரும் திரைப்படம் சலார். இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
படத்தின் டீசர் கடந்த ஜூலை 06ம் தேதி அதிகாலை 05:12 மணியளவில் வெளியானது. ரூ.200 கோடி பட்ஜெட்டில், ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வழங்கும் திரைப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது.
பாகுபலிக்கு பின் பிரபாஸ் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் வசூலை குவித்தாலும், எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை என்ற நிலையானது இருந்து வருகிரது.
சலார் திரைப்படம் கே.ஜி.எப் போல நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் நடிகர்கள் பிரபாஸ், பிரித்விராஜ், ஜெகபதி பாபு உட்பட பலரும் நடித்து இருக்கின்றனர்.
இந்நிலையில், படம் வெளியீடுக்கு முன்பே ரூ.200 கோடி வசூல் செய்துள்ளது. படத்தின் ஓ.டி.டி உரிமைகள் ரூ.200 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.