×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தமிழில் ரீமேக் ஆகும் செம ஹிட் ஹிந்தி திரைப்படம்! நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு பிரசாந்துடன் இணையும் பிரபல டாப் நடிகை!

பாலிவுட்டில் செம வரவேற்பு பெற்ற அந்தாதூன் திரைப்படம் பிரசாந்த் நடிப்பில் தமிழில் ரீமேக்காகவுள்ளது.

Advertisement

கடந்த 2018ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியாகி ரசிகர்களிடையே ஏகப்பட்ட விமர்சனங்களையும், வரவேற்பும் பெற்ற திரைப்படம் அந்தாதுன். மேலும் இப்படம் பெரும் வசூல் சாதனையும் குவித்தது. இப்படத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே ஆகியோர் நடித்திருந்தனர். மேலும் இப்படம் மூன்று தேசிய விருதுகளையும் பெற்றது.

 இந்த நிலையில் அந்தாதூன் படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ரீமேக் செய்ய முடிவெடுக்கப்பட்டது. மேலும் தெலுங்கில் ரீமேக் ஆகும் படத்தில் ஹீரோவாக நிதினும், தபு கதாபாத்திரத்தில் தமன்னாவும்,  ராதிகா ஆப்தே வேடத்தில் நபா நடேஷும் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது.


இந்நிலையில் இப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய தனுஷ், சித்தார்த் போன்ற நடிகர்கள் முயற்சி செய்தநிலையில், பிரசாந்தின் தந்தை நடிகர் தியாகராஜன் அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கியுள்ளார். அப்படத்தை பொன்மகள் வந்தாள் படத்தை இயக்கிய ஜேஜே பிரட்ரிக் இயக்கவுள்ளார். மேலும் இதில் தபு கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை ஐஸ்வர்யா ராயிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஜீன்ஸ் படத்தை தொடர்ந்து நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு பிரசாந்த் ஐஸ்வர்யாராய் இணைந்து நடிப்பார்களா என ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியுள்ளது.

 

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Prasanth #Anthathoon #aishwarya rai
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story