இந்த முறை அஜித்துடன் இணைந்து நடிக்கமுடியவில்லை! மிகுந்த வருத்தத்தில் பிரபல முன்னணி நடிகர்!
Prasanna not acting in ajith valimai movie

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்த தற்போது முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித். அவர் விஸ்வாசம், நேர்கொண்டபார்வை படத்தைத் தொடர்ந்து தற்போது வலிமை திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
அஜித்தின் 60வது படமான அத்திரைப்படத்தை போனி கபூரின் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. மேலும் வலிமை படத்தை ஹெச்.வினோத் இயக்குகிறார். இப்படத்தில் தல அஜீத் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். மேலும் கடைசியில் கார் மற்றும் பைக் ரேஸ்களும் இடம்பெறுகிறது. இத்திரைப்படம் தீபாவளிக்கு ரிலீசாக உள்ளது.
இந்நிலையில் நடிகர் பிரசன்னா இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் மிகவும் அன்புடன் வலிமை படத்தில்தான் அளிக்க வேண்டும் என நினைத்த அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள். என்னுடைய திரை வாழ்க்கையில் மிகப்பெரிய அறிவிப்பாக இச்செய்தியை அறிவிக்கவேண்டும் என்று நான் நினைத்தேன். ஆனால் துரதிஷ்டவசமாக அந்த வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. ஆனால் விரைவில் தல அஜித்துடன் இணைந்து நடிப்பேன் எனக் கூறியுள்ளார்.