×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிகர் விஜயுடன் இணையும் மாஸ் ஹீரோ! அட.. யார்னு பார்த்தீர்களா! செம குஷியான ரசிகர்கள்!!

12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிகர் விஜயுடன் இணையும் மாஸ் ஹீரோ! அட.. யார்னு பார்த்தீர்களா! செம குஷியான ரசிகர்கள்!!

Advertisement

முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய், மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகிவரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் பீஸ்ட் திரைப் படத்தில் ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.

இதனைத்தொடர்ந்து சமீபகாலமாக தளபதியின் 66வது படம் குறித்த பல சுவாரசியமான தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. தளபதியின் 66வது படத்தை பிரபல இயக்குனரான வம்சி இயக்குகிறார். மேலும் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ இப்படத்தை தயாரிக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் இப்படத்தில் விஜய்யின் மகளாக பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் மகள் சிதாரா நடிக்க உள்ளதாக தகவல்கள் பரவியது.

இந்த நிலையில் தற்போது தளபதி 66வது படத்தில் பிரகாஷ் ராஜ் இணையவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அவரே பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். நடிகர் பிரகாஷ்ராஜ் விஜய்யுடன் இணைந்து  கில்லி, போக்கிரி, சிவகாசி, வில்லு போன்ற படங்களில்  வில்லனாக நடித்திருந்தார். இந்நிலையில் அவர் தற்போது 12 ஆண்டுகளுக்கு  பிறகு நடிகர் விஜய்யுடன் இணைந்து நடிக்க உள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Prakashraj #Thalapathy 66
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story