×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஹாய் பப்பு.. ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரபல முன்னணி நடிகர்! வைரலாகும் வீடியோ!!

ஹாய் பப்பு.. ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரபல முன்னணி நடிகர்! வைரலாகும் வீடியோ!!

Advertisement

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்தமகள் ஐஸ்வர்யா. தனுஷின் மனைவியான அவர் அண்மையில் அவரை விவாகரத்து செய்வது குறித்து அறிவிப்பு வெளியிட்டார். இது ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பயணி என்ற ஆல்பம் பாடலை உருவாக்கி வருகிறார்.

இந்த ஆல்பம் பாடல் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என நான்கு மொழிகளிலும் உருவாகிறது. இப்பாடலுக்கு அன்கித் திவாரி இசையமைத்துள்ளார். மேலும் தமிழில் அனிருத்தும், மலையாளத்தில் ரஞ்சித் கோவிந்தும், தெலுங்கில் சாகரும், இந்தியில் அன்கித் திவாரி இப்பாடலை  பாடியுள்ளனர்.

இந்நிலையில் விரைவில் வெளியாகவுள்ள இந்த ஆல்பம் பாடலுக்கு வாழ்த்துக் கூறி பிரபுதேவா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், வணக்கம் பப்பு, உங்களுக்கெல்லாம் அவங்க ஐஸ்வர்யா, ஆனா எனக்கு  அவங்க எப்பவுமே பப்புதான். அவங்க 9 வருஷம் கழித்து ஆல்பம் செய்துள்ளார். 

பப்பு அவ்வளவு சீக்கிரம் எதையும் ஒத்துகொள்ள மாட்டார். அப்படி இருக்கவங்களே ஆல்பம் பாடல் உருவாக்கி, அதனை நான்கு மொழிகளில் வெளியிடுகிறார் என்றால் அது சூப்பராகதான் இருக்கும் என கூறியுள்ளார். இந்நிலையில் வாழ்த்துக் கூறிய பிரபுதேவாவிற்கு ஐஸ்வர்யா நன்றி கூறி அந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Prabhudeva #Aishwarya rajinikanth #Album
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story