ஆதிபுருஷ்..மெகா பட்ஜெட் பிரமாண்ட திரைப்படத்தில் நடிகர் பிரபாஸ் எடுக்கும் புதிய அவதாரம்! வெளியான ரகசியத்தால் செம எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
Prabhas act as rama in adhipurush movie

தன்ஹாஜி இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் உருவாகவிருக்கும் நடிகர் பிரபாஸின் 22வது படம் தொடர்பான அறிவிப்புகள் சமீபத்தில் வெளியானது. இப்படத்தை பூஷண் குமார் தயாரிக்கவுள்ளார். மேலும் இந்தப் படம் 3டி தொழில்நுட்பத்தில் பெரும் பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாக உள்ளது.
இந்திய காவியத்தை அடிப்படையாக கொண்ட இந்த படம் இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாக்கப்பட்டு, இதர மொழிகளில் டப்பிங் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் ஆதிபுருஷ் என்று பெயரிடப்பட்ட இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. இந்த போஸ்டரின் மூலம் அப்படம் ராமாயணம் கதையின் ஒரு பகுதியாக இருக்கலாம் என கணிக்கப்பட்டது.
இந்நிலையில் ஆதிபுருஷ் படத்தில் பிரபாஸ் ராமராக நடிக்கவுள்ளதாக இயக்குநர் நாக் அஸ்வின் தனது ட்விட்டர் பதிவில் போட்டுடைத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், பிரபாஸ் அவர்களை கடவுள் ராமராக பார்ப்பதற்கு மிகுந்த ஆர்வமாக உள்ளேன். மிகச் சில நடிகர்களே ராமராக இதற்கு முன் பெரிய திரையில் நடித்துள்ளனர். மொத்த குழுவிற்க்கும் வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த ட்விட்டர் பதிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.