×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பீஸ்ட் நாயகியிடம், செல்பி எடுக்க வந்த இளைஞர் செய்த காரியம்! தீயாய் பரவும் வீடியோ!!

பீஸ்ட் நாயகியிடம் செல்பி எடுக்க வந்த இளைஞர் செய்த காரியம்! தீயாய் பரவும் வீடியோ!!

Advertisement

தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த முகமூடி படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர்  நடிகை பூஜா ஹெக்டே. அதனை தொடர்ந்து அவருக்கு தமிழில் பெரியளவில் வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் அவர் தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உள்ளார். பூஜா ஹெக்டே தற்போது தளபதி விஜய்யுடன் இணைந்து பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார்.

இந்த படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய  மொழிகளில் ஏப்ரல் 13ம் தேதி வெளியாக உள்ளது. பூஜா ஹெக்டே பிரபாஸுடன் இணைந்து நடித்த ராதே ஷ்யாம் திரைப்படம் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பூஜா ஹெக்டே பிட்னஸ் மீது அதிக ஆர்வம் காட்டிவருகிறார்.

இந்நிலையில் அவர் அண்மையில் உடற்பயிற்சிகளை முடித்து விட்டு, ஜிம்மில் இருந்து வெளியே வரும் போது ரசிகர் ஒருவர் அவரை அணுகி செல்பி எடுக்க கேட்டுள்ளார். அவரும் மறுக்காமல் அந்த நபருடன் செல்பி எடுத்துள்ளார். பின்னர் அங்கிருந்து செல்ல முயன்ற பூஜா ஹெக்டேவை மேலும் செல்பி எடுக்க அந்த இளைஞன் தொந்தரவு செய்துள்ளார். பின்னர் அங்கிருந்த மீடியா போட்டோகிராபர்கள் வெளியேற  சொல்லவே அவர் அங்கிருந்து சென்றுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Pooja hegde #Swlfi #video
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story