விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருக்கு ஜோடியாகும் நடிகை பூஜா ஹெக்டே! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளிவந்த முகமூடி என்ற திரைப்படத்தில்
தமிழ் சினிமாவில் மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளிவந்த முகமூடி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. பூஜாஹெக்டே தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
மேலும் தமிழில் ஒரு சில படங்களிலேயே நடித்த நடிகை பூஜா ஹெக்டே தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் விஜய் நடிக்கும் பீஸ்ட் திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதனை தொடர்ந்து பூஜா ஹெக்டேவிற்கு அடுத்தடுத்து ஏராளமான பட வாய்ப்புகள் குவிய தொடங்கியுள்ளன.
அந்த வகையில் நடிகை பூஜா ஹெக்டே அடுத்ததாக தனுஷ் நடிக்கவிருக்கும் புதிய படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362