×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பொன்னியின் செல்வன்.. அழகு தேவதையாக ஜொலிக்கும் குந்தவை! யார்னு பார்த்தீங்களா.!பர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ!!

பொன்னியின் செல்வன்.. அழகு தேவதையாக ஜொலிக்கும் குந்தவை! யார்னு பார்த்தீங்களா.!பர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ!!

Advertisement

பிரபல இயக்குனர் மணிரத்னம் கல்கியின் நாவலான பொன்னியின் செல்வன் படத்தை 2 பாகங்களாக இயக்கி வருகிறார். பெரும் பொருட் செலவில் மிகவும் பிரமாண்டமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ம் தேதி திரையரங்கில் ரிலீஸாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது.

இதில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், பிரகாஷ் ராஜ், ரகுமான், திரிஷா, ஐஸ்வர்யா ராய் என பெரும் நட்சத்திரபட்டாளமே முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  பொன்னியின் செல்வன் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என 5 மொழிகளிலும் ரிலீசாக உள்ளது.

இந்த நிலையில் கடந்த நாட்களில் ஆதித்ய கரிகாலனாக நடிக்கும் நடிகர் விக்ரமின் போஸ்டர், வந்தியதேவனாக நடிக்கும் கார்த்தியின் போஸ்டர் மற்றும் பழுவூர் ராணி நந்தினியாக நடிக்கும் ஐஸ்வர்யா ராய் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்த நிலையில் தற்போது குந்தவை நடிக்கும் த்ரிஷாவின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் ஆண்களின் உலகில், தைரியமான பெண், குந்தவை இளவரசி என்று குறிப்பிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#ponniyin selvan #Kunthavai #trisha
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story