×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வாவ்! நயன்தாரா பேருக்கு இப்படியொரு அர்த்தமா? ரசிகர்களை குஷியாக்கிய நடிகை ஸ்ரீதேவியின் கணவர்!

ponikapoor said the meaning of nayanthara

Advertisement

தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித், சூர்யா, ஆர்யா என பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான வெற்றிப் படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக கொடிகட்டி பறப்பவர் நயன்தாரா. தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் இவர்  ஐயா திரைப்படம் மூலம் அறிமுகமாகி தற்போது தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக உள்ளார் . 

அவரது நடிப்பில் உருவாகி, தீபாவளியை முன்னிட்டு பிகில் திரைப்படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து அவர் ரஜினியுடன் இணைந்து தர்பார் படத்தில் நடித்துள்ளார். அப்படம் பொங்கலுக்கு ரிலீசாகவுள்ளது.


சினி விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில்  நேற்று மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் முன்னணி நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள் என பல பிரபலங்களும் கலந்துகொண்டனர். இந்நிலையில் சிறந்த நடிகைக்கான விருந்து லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவிற்கு வழங்கப்பட்டது.  மேலும் அவருக்கு Sridevi Award for Inspiring Women of Indian Cinema என்ற விருதும் வழங்கப்பட்டது. அதனை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தான் வழங்கினார்..

அப்பொழுது அவர் தாரா என்றால் ஹிந்தியில் நட்சத்திரம் என்று அர்த்தம். எனவே இந்த விருதுக்கு நயன்தாரா மிகவும் தகுதியானவர் தான் என போனிகபூர் கூறியுள்ளார்
 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Nayathara #ponikapoor #award
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story