×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

உருவாகிறது பிசாசு 2! நள்ளிரவு 12 மணிக்கு வெளியான அறிவிப்பு! ஹீரோயின் யார் தெரியுமா?

Pisasu 2 movie directed by miskin

Advertisement

கடந்த 2014ஆம் ஆண்டு பாலா தயாரிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் பிசாசு. இப்படத்தில் நாகா , பிரயாகா மார்டின், ராதாரவி ஆகியோர் நடித்திருந்தனர். திகில் கலந்த பேய் படமான பிசாசு திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.

இந்நிலையில் தற்போது பிசாசு 2 திரைப்படம் தயாராக உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு  மிஸ்கின் பிறந்த நாளை முன்னிட்டு நள்ளிரவு 12 மணியளவில் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ஆண்ட்ரியா ஒப்பந்தமாகியுள்ளார்.

மேலும் பிசாசு 2 திரைப்படத்தை ராக்ஃபோர்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளது. மேலும் கார்த்திக் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். பிசாசு 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து தொடங்கப்படும் என கூறப்படுகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Miskin #Pisasu 2 #Aandriya
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story