×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் தூர்தர்ஷனில் ஒளிபரப்பு.. கேரள முதலமைச்சர் பிரனாயி விஜயன் கடும் கண்டனம்!

'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் தூர்தர்ஷனில் ஒளிபரப்பு.. கேரள முதலமைச்சர் பிரனாயி விஜயன் கடும் கண்டனம்!

Advertisement

கடந்தாண்டு மே மாதம் வெளியான தி கேரளா ஸ்டோரி திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி வசூல் சாதனை படைத்தது. இந்தப் படத்தின் கதை கேரளாவில் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு வருவதாகவும், குறிப்பாக ஹிந்து பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதாகவும் எடுக்கப்பட்டிருந்தது.

இந்த படத்திற்கு கடும் விமர்சனம் எழுந்த நிலையில், படத்தை தடை செய்ய போராட்டங்கள் நடைபெற்றது. ஆனால் இந்த படம் நாடு முழுவதும் வெளியாகி 200 கோடிக்கு மேல் சூல் செய்து சாதனை படைத்தது. இதனிடையே கடந்த பிப்ரவரி 16ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் மத்திய அரசின் தொலைக்காட்சி நிறுவனமான தூர்தர்ஷனில் இன்று மாலை 5 மணிக்கு ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த படத்தை ஒளிபரப்புவது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் தனது சமூக வலைதள பக்கத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், "பிரிவினையை தூண்டும் வகையில் 'தி கேரள ஸ்டோரி' திரைப்படத்தை தூர்தர்ஷன் நிறுவனம் ஒளிபரப்புவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தேசிய செய்தி ஒளிபரப்பு நிறுவனம் பாஜக-ஆர்எஸ்எஸ் கூட்டணியின் பிரச்சார இயந்திரமாக மாறக்கூடாது என்றும் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக வகுப்புவாத பதட்டங்களை அதிகப்படுத்த முயலும் திரைப்படத்தை திரையிடுவதை நிறுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#The kerala story #KERALA #dd #pinarayi vijayan
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story