×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இளமை ஊஞ்சலாடும் ரஜினி, சிம்ரன் காதல் ஜோடி! வெளியானது பேட்ட படத்தின் புதிய போஸ்டர்

petta new poster with rajini and simran

Advertisement

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் பேட்ட. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகப்பிரமாண்டமான பொருட்செலவில் தயாரித்து வரும் நிலையில் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்திற்கு கூடுதல் சிறப்பு என்னவென்றால், இந்த படத்தில் சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, நவாசுதீன் சித்திக், குரு சோமசுந்தரம், சனந்த் ரெட்டி, மகேந்திரன், மேகா ஆகாஷ், சசிக்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்து வருகின்றனர். 

ஊட்டியை கதைக்களமாக கொண்டு உருவாகிக் கொண்டிருக்கும் படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஐரோப்பா, டார்ஜிலிங், டேராடூன், லடாக், சென்னை போன்ற இடங்களில் படமாக்கப்பட்ட நிலையில் இறுதிகட்ட படப்பிடிப்புகள் சில நாட்களுக்கு முன்பு நிறைவுபெற்றது.

பேட்ட’ படத்தை பொங்கல் பண்டிகையின் விடுமுறையை முன்னிட்டு வரும் ஜன.10ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் பேட்ட படத்தின் புதிய போஸ்டரை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இன்று வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டரில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் சிம்ரன் இளமை ததும்ப காதல் ஜோடிகளாக வலம் வரும் காட்சி ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.



 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#petta #rajini #simran #kartik subburaj
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story