×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

"சுண்டு விரலை பார்சலில் அனுப்பிய ரசிகை!" பெப்சி உமா கூறிய அதிர்ச்சி சம்பவம்!

சுண்டு விரலை பார்சலில் அனுப்பிய ரசிகை! பெப்சி உமா கூறிய அதிர்ச்சி சம்பவம்!

Advertisement

'பெப்சி' உமாவை 90ஸ் கிட்ஸ் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். அந்தளவு அவர் தனது சிரிப்பினாலும், கண்ணியமான பேச்சினாலும், நேர்த்தியாக உடுத்துவதன் மூலமும் சின்னத்திரை ரசிகர்களை கட்டிப்போட்டிருந்தார். 

தூர்தர்ஷனில் ஒளிபரப்பான "வாருங்கள் வாழ்த்துவோம்" நிகழ்ச்சி தான் உமா முதலில் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி. இதன் பின்னர் சன் டிவியில் இவர் தொகுத்து வழங்கிய "பெப்சி உங்கள் சாய்ஸ்" நிகழ்ச்சியின் மூலம் தான் மிகவும் பிரபலமானார்.

இவரது அழகுக்கு சினிமா வாய்ப்புகள், விளம்பர வாய்ப்புகள் இவரைத் தேடி வந்த போதும், இவர் எதிலும் நடிக்க ஒத்துக் கொள்ளவில்லை. இதையடுத்து அவர் நல்ல புகழின் உச்சியில் இருந்தபோதே, திடீரென காணாமல் போனார். அவருக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களே இதற்கு காரணம் என்று கூறப்பட்டது.

இந்நிலையில், சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய உமா, "ஒரு நாள் எனக்கு ஒரு பார்சல் வந்தது. ஒரு ரசிகை அனுப்பி அதில் ஒரு சுண்டு விரல் இருந்தது. இது எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. இது எனக்குள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது" என்று கூறினார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#latest #News #Viral #controversy #Trending
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story