தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சினேகா கர்ப்பமா இருந்தாலும் அந்த காட்சியில் தைரியமா நடிச்சாங்க..! பட்டாஸ் டைரக்டர் வெளியிட்ட சுவாரசிய தகவல்!

Pattas movie interesting things shared by director

pattas-movie-interesting-things-shared-by-director Advertisement

இயக்குனர் துறை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் பட்டாஸ். பொங்கல் தினத்தை முன்னிட்டு திரைக்கு வந்துள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு தனுஷை இளமையான தோற்றத்தில் பார்ப்பதாக அவரது ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

இந்த படத்தில் தனுஷுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார் நடிகை ஸ்னேஹா. படம் முழுவதுமே தனுஷுடன் இணைந்து இவர் பயணித்திருக்கிறார். படத்தில் நடந்த சுவரியமான சம்பவங்கள் குறித்து படத்தின் இயக்குனர் துறை செந்தில்குமார் பேசியுள்ளார்.

இந்த படம் அடிமுறை என்ற தற்காப்பு கலையை மையமாக கொண்டது. படப்பிடிப்பின் போது நடிகை ஸ்னேஹா கர்ப்பமாக இருந்ததால் அவரை வைத்து எப்படி வேலை வாங்குவது என யோசித்துள்ளார் இயக்குனர். அதிலும் அடிமுறை காட்சிகளை எப்படி படமாக்குவது என தயங்கியுள்ளார்.

Dhanush

இந்நிலையில் தான் கர்ப்பமாக இருப்பதையும் மறந்து, வாந்தி, மயக்கம், தலைசுற்றல் இவற்றையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு படத்திற்காக தனது முழு எனர்ஜியையும் கொடுத்து நடிகை ஸ்னேகா நடித்ததாக பெருமையுடன் கூறியுள்ளார் படத்தின் இயக்குனர் துறை செந்தில்குமார்.

புதுப்பேட்டை படத்தில் தனுஷுடன் இணைந்து ஸ்னேகா நடித்திருந்தார், நீண்ட இடைவெளிக்கு பிறகு தனுஷ் - ஸ்னேகா கூட்டணியில் இந்த படம் நீண்ட காலத்திற்கு பேசப்படும் எனவும் படத்தின் இயக்குனர் கூறியுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Dhanush #sneha #pattas
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story