முன்னணி நடிகையின் அழகை வர்ணித்து நடிகர் பார்த்திபன் வெளியிட்ட புகைப்படம்! மரணகலாய் கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்!
Parthiban kushpu

தமிழ் சினிமாவில் அதிகப்படியான காமெடி கலந்த பல வெற்றித் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் பார்த்திபன். இவர் நடிப்பதோடு மட்டுமல்லாமல் புதியபாதை, சுகமான சுமைகள், குடைக்குள் மழை, பச்சக்குதிரை, கோடிட்ட இடங்களை நிரப்புக போன்ற பல படங்களை இயக்கியும் உள்ளார்.
இவ்வாறு நடிப்பு, இயக்கம் இரண்டிலும் சிறந்து விளங்கி மக்களிடம் நீங்கா இடத்தை பிடித்துள்ளார். மேலும் எப்பொழுதும் வினோதமான புதிய முறையில் யோசிக்கும் பார்த்திபன், கிண்டல் கலந்த கலகலப்பான பேச்சால் ஏராளமான ரசிகர்கள் மத்தியில் அதிகம் விரும்பப்படுபவராகவும் இருக்கிறார்.
இந்நிலையில் தற்போது புகைப்பட கலைஞர் ஜி. வெங்கட்ராம் அவர்கள் ரவிவர்மாவின் அழகிய ஓவியங்களை போல் சில முன்னணி நடிகைகளை வைத்து போட்டோஷுட் ஒன்றை எடுத்துள்ளது. மேலும் இந்த புகைப்படங்கள் லிமிடெட் எடிசன் காலண்டருக்காக எடுக்கப்பட்டுள்ளது.
அதில் நடிகர் பார்த்திபன் நடிகை குஷ்புவின் புகைப்படத்தை அவருக்கே உரித்தான கவிதை பாணியில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் பார்த்திபனை மரணகலாய் கலாய்த்து வருகின்றனர்.