×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அட.. சீரியலில் நடிப்பதற்கு முன்பு பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா என்ன வேலை செய்துள்ளார் தெரியுமா?? வெளிவந்த சுவாரஷ்ய தகவல்!!

அட.. சீரியலில் நடிப்பதற்கு முன்பு பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா என்ன வேலை செய்துள்ளார் தெரியுமா?? வெளிவந்த சுவாரஷ்ய தகவல்!!

Advertisement

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்று வரும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். கூட்டு குடும்பக் கதையை, அண்ணன் தம்பி பாசத்தை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாகி வரும் இத்தொடரில் ஸ்டாலின், சுஜிதா, குமரன், காவியா, ஹேமா, வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

பாண்டியன் ஸ்டோர் தொடரில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மனதை கவர்ந்தவர் நடிகை ஹேமா. இவரது கதாபாத்திரம் ஆரம்பத்தில் வில்லி போல காண்பிக்கப்பட்டது. ஆனால் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மாறி அனைவருக்கும் பிடித்த காமெடி கலந்த கதாபாத்திரமாக உள்ளது. மேலும் இவருக்காகவே இந்த சீரியலை பார்ப்பவர்களும் ஏராளம்

ஹேமா தற்போது பாண்டியன் ஸ்டோர் தொடரில் நடிப்பது மட்டுமல்லாமல் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். அதில் ஏராளமான வீடியோக்களை வெளியிட்டு செம பிஸியாக உள்ளார். 
மயிலாடுதுறையில் பிறந்த ஹேமா தொடக்கத்தில் உள்ளூர் சேனல் ஒன்றிலேயே தொகுப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கியுள்ளார். பின்னர் வசந்த் டிவியில் செய்தி வாசிப்பாளரானார். மேலும் சில செய்தித் தொலைகாட்சிகளிலும் பணியாற்றியுள்ளார்.

அதனை தொடர்ந்து ஆஃபிஸ் தொடரின் மூலம், சின்னத்திரைக்குள் நுழைந்த அவர் பின்னர் பொன்னுஞ்சல், தென்றல், குலதெய்வம், மெல்ல திறந்தது கதவு, சின்னத்தம்பி போன்ற பல சீரியல்களில் முக்கிய சிறு கதாபாத்திரங்களில் நடித்தார். மேலும் வெள்ளித்திரையிலும் ஆறாது சினம், சவரக்கத்தி, வீரையன், இவன் யார் என்று தெரிகிறதா போன்ற  படங்களிலும் சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆனாலும் அவரை மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமடைய செய்தது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்தான்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#pandian stores #meena #News reader
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story