×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

#PromoVideo: சூரியவம்சம் கதையை காப்பியடித்த பாண்டியன் ஸ்டோர்ஸ்?.. இலையோடு ஓடிய கண்ணன்., உச்சகட்ட மகிழ்ச்சியில் கதிர் - முல்லை.!

#PromoVideo: சூரியவம்சம் கதையை காப்பியடித்த பாண்டியன் ஸ்டோர்ஸ்?.. இலையோடு ஓடிய கண்ணன்., உச்சகட்ட மகிழ்ச்சியில் கதிர் - முல்லை.!

Advertisement

பிரபல விஜய் டி.வி-யில் ஒளிபரப்பாகி வரும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன் - தம்பிகளின் பாசப்பிணைப்பை மையக்கருவாக வைத்து ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இத்தொடர் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பையும் பெற்றுள்ளது. அண்ணன் - தம்பிகள் பாண்டியன் ஸ்டோர்ஸ் மூலமாக வளர்ந்து, இன்று பாண்டியன் மெஸ் வைத்துள்ளனர். 

கதிர் - முல்லை சில சூழ்நிலையால் வீட்டினை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு இருந்தாலும், அவர்களுக்கான வாழ்க்கையை அவர்கள் தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்ட காரணத்தால் பாண்டியன் மெஸ் என்ற உணவகத்தை திறந்துள்ளார். 

இவர்களின் மெஸ் திறப்பு விழாவிற்கு சூரிய வம்சம் திரைப்பட பாணியில் குடும்பத்தினர் வந்து செல்கின்றனர். இது தொடர்பாக அடுத்த வாரத்திற்கான பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரமோவில், "கதிரின் அண்ணன் ஜீவா முதலில் வந்து தனது சகோதரர் கதிருக்கு பரிசளிக்கிறார். 

இதன்பின் வரும் கண்ணன் சிறிய பரிசை கொடுத்து சாப்பிட்டு கொண்டு இருக்கிறார். அந்த சமயத்திலேயே திடீரென அண்ணி தனம் வந்துவிட, கண்ணன் இலையோடு ஓட்டம் பிடிக்கிறார். அண்ணி தனத்திடம் கதிர் - முல்லை ஜோடி ஆசிபெற, அதனைத்தொடர்ந்து ஐஸ்வர்யா மற்றும் அவரின் சித்தி ஆகியோர் உணவருந்திக்கொண்டு இருக்கின்றனர். 

அப்போது திடீரென மீனா பாண்டியன் மெஸ் உணவகத்திற்குள் நுழைந்துவிட, ஐஸ்வர்யா தப்பிக்கும் முயற்சியில் தோல்வியை தழுவி மீனாவின் மீது இடித்து சிக்கிக்கொள்கிறார். இறுதியாக கதிர் தனக்கு மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவிக்க ப்ரமோவும் நிறைவு பெறுகிறது.

பாண்டியன் மெஸ்க்கு வருகை தரும் குடும்பத்தினர் தொடர்பான காட்சிகள் ஏற்கனவே சூரிய வம்சம் திரைப்படத்தில் உள்ள காட்சியை ஒத்து இருப்பதால், அதனை மேற்கோள்காட்டி ரசிகர்கள் தங்களின் கலாய்களை வெளிப்படுத்தி வருகின்றனர். லைக்குகள் மற்றும் கமெண்டுகள் குவிந்து வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#pandian stores #vijay tv #Pandian Stores Kadhir #Kadhir Mullai #Tamil Television
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story