×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சும்மா லெப்ட் ரைட் வாங்கிவிட்டு, பாக்கியலட்சுமி எடுத்த அதிரடி முடிவு.! அதிர்ச்சியில் ஆடிப்போய் நின்ற கோபி! வைரலாகும் வீடியோ!!

சும்மா லெப்ட் ரைட் வாங்கிவிட்டு, பாக்கியலட்சுமி எடுத்த அதிரடி முடிவு.! அதிர்ச்சியில் ஆடிப்போய் நின்ற கோபி! வைரலாகும் வீடியோ!!

Advertisement

விஜய் டிவியில் தற்போது மிகவும் விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் ஒளிபரப்பாகி வரும் தொடர் பாக்கியலட்சுமி. இந்த தொடரை ரசிகர்கள் மிகவும் விரும்பி பார்த்து வருகின்றனர்.  மேலும் ஒரு இல்லத்தரசியின் கதையை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாகிவரும் இந்த தொடருக்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

பாக்கியலட்சுமி தொடரில் பாக்கியலட்சுமியின் கணவராக நடிக்கும் கோபி மனைவிக்கு தெரியாமல் தனது காதலி ராதிகாவுடன் தொடர்பு வைத்திருப்பார். கடந்த எபிசோடுகளில் இந்த உண்மை பாக்கியலட்சுமிக்கு தெரியவந்து பரபரப்பான பல திருப்பங்கள் நடைபெற்றது. இந்த நிலையில் தற்போது புதிய ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

அதில் குடும்பமே கதி என இருந்த பாக்கியலட்சுமி மிகவும் தைரியமாக  நீதிமன்றத்திற்க்கு சென்று கணவர் கோபிக்கு விவாகரத்து கொடுத்துள்ளார். பாக்கியலட்சுமியின் திடீர் தைரியம் மற்றும் அதிரடியான முடிவை கண்டு கோபி அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்த வீடியோ வைரலான நிலையில் இனி பல திருப்பங்கள் ஏற்படும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#pakialakshmi #Promo #vijay tv
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story