1000 பேர்க்கு முன்னாடியும் அதெல்லாம் வெட்கமே இல்லாம செய்வேன்! ஓவியாவின் பதிலால், ஷாக் ஆன ரசிகர்கள்!
oviya answer about act glamour

தமிழ் சினிமாவில் களவாணி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஓவியா. அதனை தொடர்ந்து அவர் முத்துக்கு முத்தாக, மெரினா, கலகலப்பு, மூடர் கூடம், மதயானை கூட்டம், புலிவால் என பல படங்களில் நடித்துள்ளார்.
மேலும் அவர் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 1ல் கலந்துகொண்டு தனது இயல்பான நடவடிக்கையாலும், குழந்தைத்தனமான வெளிப்படையான பேச்சாலும் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளத்தை பெற்றார். மேலும் அவருக்கு ஓவியா ஆர்மியும் உருவானது.
இந்நிலையில் தற்போது அனிதா உதீப் இயக்கத்தில் சிம்பு இசையமைப்பில் ஓவியா நடித்துள்ள படம் 90 ml.ஆபாசம் நிறைந்த இப்படத்திற்கு ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.
மேலும் இப்படம் 22ஆம் தேதி இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சில தொழில்நுட்ப காரணங்களால் மார்ச் 1-ஆம் தேதிக்குள் வெளியிடப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு ஓவியா அளித்துள்ள பேட்டியில் முத்த காட்சி மற்றும் ஆபாச காட்சிகளில் நடிப்பது குறித்து கேள்வி எழுப்பியபோது, இதில் என்ன வெட்கம் இருக்கிறது. இதுதான் என்னுடைய வேலை. 100 பேர் இருந்தாலும் ஆயிரம் பேர் இருந்தாலும் இவற்றையெல்லாம் வெட்கமே இல்லாமல் செய்வேன்.
மேலும் நான் இவ்வாறு நடிப்பது பற்றி யாரேனும் தவறாக நினைத்தால் அதை பற்றிய கவலை எனக்கு இல்லை என ஓவியா கூறியுள்ளார்.